Sahoo Movie Update : Prabhas, Shraddha Kapoor, Arun Vijay, Jackie Shroff, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
8 நிமிட காட்சிக்கு ரூ 70 கோடி செலவு செய்துள்ளது சாஹோ படக்குழு. இந்த தகவல் ரசிகர்களை ஷாக்காகியுள்ளது.

Sahoo Movie Update : தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் மூலமாக இந்தியாவின் பேவரைட் நடிகர்கள் லிஸ்டில் இடம் பிடித்தார்.

தற்போது தெலுங்கு திரையுலகை தாண்டி தமிழிலும் மிக் பெரிய ரசிகர்கள் கூட்டம் பிரபாஸிற்காக உருவாகி விட்டது. பெண்கள் விரும்பும் மன்மதனாகி விட்டார் என்று கூட சொல்லலாம்.

இவர் தற்போது சுஜித் இயக்கத்தில் உருவாகி வரும் சாஹோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மூன்று தயாரிப்பாளர்கள் மூன்று இசையமைப்பாளர்கள் என மிக பெரிய கூட்டமே இணைந்து உருவாகி வரும் இந்த படத்தில் தமிழ் நடிகரான அருண் விஜயும் நடித்து வருகிறார். அனிருத்தும் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

தற்போது இந்த படத்தில் இருந்து சூப்பர் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அது என்னவென்றால் வெறும் 8 நிமிட காட்சிக்காக ரூ 70 கோடி செலவு செய்துள்ளதாம் படக்குழு.

இந்த தகவலால் அப்படி என்ன காட்சி அது? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக எழுந்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.