SAC Angry Reply : Vijay's Father SAC Reaction About Bigil Movie - Video.! | S A ChandraSekar | Thalapathy Vijay | Atlee | Kollywood Cinema News
பிகில் குறித்து கேட்ட கேள்வியால் மேடையிலேயே கடுப்பாகியுள்ளார் எஸ்.ஏ.சி. அந்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.

SAC Angry Reply : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக பல இயக்குனர்களின் குருவாக வலம் வருபவர் எஸ்.ஏ சந்திரசேகர். இவர் தற்போது ஜெய்யை வைத்து கேப்மாரி என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் செய்தியாளர்கள் எஸ்.ஏ.சியிடம் பல கேள்விகளை எழுப்பினர்.

அட்லீயின் அடுத்த ஹீரோ இவர் தானா? – அப்போ அடுத்த படமும் மாஸ் தான்.!

அப்போது ஒருவர் இதுவரை நீங்கள் உங்கள் படங்களில் சொல்வதெல்லாம் அடுத்தடுத்து நடந்து வருகிறது. தேர்தலுக்கு முன்பு பாஜக ஜெயித்தால் காவி கட்டிக்கிட்டு திரிய வேண்டியது தான் என கூறி இருந்தீர்கள்.

ஆனால் தற்போது விஜய் பிகில் படத்தில் காவி வேட்டி கட்டி கொண்டு நடித்துள்ளார், அது ஏன் என கேள்வி எழுப்பினார்.

அவரை கேள்வி கேட்க யோகிதை இல்ல, NKP நடிகரை விளாசிய சின்மயீ – வைரலாகும் ட்வீட்.!

இதனால் கடுப்பான எஸ்.ஏ.சி இந்த படத்தை பற்றி மட்டும் கேள்வி கேளுங்க, எதுக்கு விஜயை இழுக்கறீங்க என கோபமாக பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.