Saamy Movie Budget and Profit
Saamy Movie Budget and Profit

ரூபாய் 5 கோடி பட்ஜெட்டில் வெளியான சாமி படத்தின் வசூல் நிலவரத்தை பார்க்கலாம் வாங்க.

Saamy Movie Budget and Profit : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்திற்கு ஏற்பவும் தன்னுடைய உடல் அமைப்பை மாற்றிக் கொள்வதில் வல்லமை படைத்தவர்.

இவரது நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் கடந்த 2003 இல் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம் சாமி.

திரௌபதி படத்தால் கொட்டிய லாபம் எவ்வளவு? – வெளிப்படையாக அறிவித்த இயக்குனர் மோகன் ஜி.!

வெறும் 5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் மொத்தமாக ரூபாய் 28 கோடி வசூல் செய்துள்ளது.

இதில் ரூபாய் 24 கோடி இந்தியாவில் மட்டும் வசூலாகியுள்ளது. ஓவர்சீஸ் நாடுகளில் ரூபாய் 4 கோடி வசூலை இப்படம் பெற்றுள்ளது.

இதனால் இப்படம் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என அனைத்து தரப்பிற்கும் லாபத்தை அள்ளிக் கொடுத்துள்ளது.

இதன் காரணமாகவே சாமி ஸ்கொயர் என இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. ஆனால் அப்படம் பெரிய அளவில் வசூலை பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.