மார்க் ஆண்டனி படக்குழுவின்ருடன் பர்த்டே செலபிரேட் செய்த எஸ் ஜே சூர்யாவின் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் தற்போது இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் அண்மையில் வெளியான டான் மற்றும் பொம்மை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

தற்போது ஜிகர்தண்டா 2, இந்தியன் 2, D50, உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வரும் இவர் விஷால் நடிப்பில் ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வரும் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாக இருக்கும் இப்படம் தொடர்பான அப்டேட்களை அவ்வப்போது படகுழு பகிர்ந்து வரும் நிலையில் எஸ் ஜே சூர்யா வின் பிறந்த நாளை மார்க் ஆண்டனி படக்குழு துப்பாக்கி சவுண்டுடன் கேக் வெட்டி செலிப்ரேட் செய்துள்ளனர். அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.