உலகிலேயே முதல் முறையாக இதுவரை இல்லாத அளவில் RRR திரைப்படம் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

RRR Release Languages Details : தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ராஜமௌலி. இவரது இயக்கத்தில் தற்போது RRR என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

உலகிலேயே இதுதான் முதல் முறை.. RRR திரைப்படம் மொத்தம் எத்தனை மொழிகளில் வெளியாகிறது தெரியுமா??

இந்த படத்தில் தமிழ் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி கைப்பற்றியது. OTT ரிலீஸ் உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் தற்போது திரைப்படம் மொத்தம் 12 மொழிகளில் வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதில் ஐந்து இந்திய மொழி கூறப்படுகிறது. ஒரு திரைப்படம் 12 மொழிகளில் வெளியாக இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.