ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 45-வது படத்தின் அப்டேட்ஸ்..

சூர்யா45′ படத்தின் தகவல்கள் காண்போம்..

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘ரெட்ரோ’ படம் ரசிகர்களை திருப்தி செய்த படமாக அமைந்துள்ளது. இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்றே தெரிகின்றது.

இந்நிலையில், ஆர்.ஜெ பாலாஜி இயக்கத்தில் சூர்யா தனது 45-வது படத்தில் நடித்து வருகின்றார். ஜோடியாக திரிஷா இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

படத்தில் சூர்யா வக்கீலாக நடிப்பதாகவும்,. இப்படத்திற்கு ‘வேட்டைக்கருப்பு’ என டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘சூர்யா 45’ ரிலீஸாகலாம் என கூறப்படுகிறது. முன்னதாக, ஜூலை 23-ம் தேதி சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் எனவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

 rj balaji directorial suriya 45 movie first look update
rj balaji directorial suriya 45 movie first look update