நீ கேவலமா இருக்க என கமெண்ட் செய்தவருக்கு பதிலடி கொடுத்துள்ளார் ரேஷ்மா.
தமிழ் சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா பசுபலேட்டி. இதற்கு முன்னதாக சின்னத்திரையில் தொகுப்பாளர், செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய இவர் தற்போது சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார், அதேபோல் ஜீ தமிழில் சீதாராமன் சீரியலில் மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் திருமண கோலத்தில் நடத்திய போட்டோஷூட் போட்டோ தனது நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக உள்ள படங்கள் குறித்து லைவ் வீடியோவில் ரசிகர்களுடன் உரையாடி உள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் நீ நல்லாவே இல்ல கேவலமா இருக்க என்று மோசமாக கமெண்ட் செய்துள்ளார்.
இதைப் பார்த்த ரேஷ்மா சிம்பிளாக ஓகே என பதில் அளித்துள்ளார். மேலும் ரசிகர்கள் மோசமாக கமெண்ட் செய்தவரை பார்த்து உனக்கு கண் அவிழ்ந்து போச்சா என்று எல்லாம் விமர்சனம் செய்து வருகின்றனர்.