ஹாக்ஐயிடம் ஒவ்வொரு மனிதனின் குணமும் உள்ளது: ஹாக்ஐயின் நுட்பமான நடிப்பு குறித்து நடிகர் ஜெர்மி ரென்னர் தெரிவித்தார்.

Release Date of Hawkeye : நவம்பர் 24 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பிரத்தியேகமாக வெளிவரவுள்ள மார்வெல் ஸ்டுடியோஸின் தொடரான ​​ஹாக்ஐயை கண்டு மகிழுங்கள். ஜெர்மி ரென்னர், ஹெய்லி ஸ்டெய்ன்ஃபீல்ட், புளோரன்ஸ் பக் மற்றும் பலர் நடித்துள்ள ஹாக்ஐ நவம்பர் 24 ஆம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது.

இராமாயணமும் அக்னி தீர்த்தமும்.!

இந்த ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில் மார்வெல் ஸ்டுடியோஸின் ஹாக்ஐ திரைப்படம் வரவிருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளிவரவுள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் புதிய வரவான இத்திரைப்படத்தில் ஜெர்மி ரென்னர் சிறந்த வில்லாளியான ஹாக்ஐயாக தனது குடும்பத்துடன் இணைய முயற்சிக்கிறார்.

ஆனால் சட்டத்திற்குப் புறம்பானவர்களுடனான அவரது முயற்சிகள் அவரது பயணத்தைத் தடுக்கின்றன. அவர்களைத் தோற்கடிக்க, ஹாக்ஐ 22 வயதான திறமையான வில்லாளி மற்றும் அவரது மிகப்பெரிய ரசிகரான கேட் பிஷப்பாக நடிகர் ஹெய்லி ஸ்டெய்ன்ஃபீல்டுடன் இணைந்து ஒரு குற்றவியல் சதியை உடைக்கிறார்.

Nadigar Sangam பொதுக்குழுவை அங்க கூட்டி இருக்கலாம்! – Actor Sathish Funny Speech | Rajavamsam

தனது அடுத்த பெரிய சாகசத்திற்காக தயாராகும் அவெஞ்சர்களில் ஒருவரை காணலாம். ஹாக்ஐ டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவிருக்கும் ஐந்தாவது மார்வெல் ஸ்டுடியோஸ் தொடராகும். இது நாடு முழுவதும் உள்ள இந்திய ரசிகர்களுக்காக அவர்களுக்கு பிடித்த மொழியில் வெளிவரவுள்ளது.

ஹாக்ஐயின் நுட்பமான நடிப்பு குறித்து இரண்டு முறை அகாடமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட நடிகர் ஜெர்மி ரென்னர் பேசுகையில், “உண்மையான ஆறு அவெஞ்சர்களில் கிளிண்ட் பார்டனும் ஒருவராவார். கிளிண்ட் மற்றும் நடாஷாவைத் தவிர்த்து அனைவருக்கும் சிறப்பு சக்திகளை கொண்டுள்ளனர். அதுவே ஒரு வகையில் ஒவ்வொருவரின் தரத்தையும் நிலைநிறுத்துகிறது.

அதன் பிறகு அவருக்கு ஒரு குடும்பம் உள்ளது என்பதும் பல அம்புகளை மாற்றுவார் எனும் உண்மையை நாம் அறிந்து கொள்ளலாம். ஒரு சூப்பர் ஹீரோ எப்படி இருக்க வேண்டும் என்பதை இது மறுவரையறை செய்கிறது என்று நினைக்கிறேன்.

அவரால் பறக்க முடியாமல் போகலாம் அல்லது சிறப்பு சக்திகள் இல்லாமல் இருக்கலாம் ஆனால் வில்லையுடைய ஒரு நிஜ வாழ்க்கை ஹீரோ ஆவார்” எனக் கூறினார்.

இயக்குநர்கள் ரைஸ் தாமஸ் மற்றும் பெர்ட் மற்றும் பெர்டி ஆகியோரால் தொலைக்காட்சிக்காக இயக்கப்பட்ட இதில் ஜெர்மி ரென்னர், ஹெய்லி ஸ்டெய்ன்ஃபீல்ட், வேரா ஃபார்மிகா மற்றும் புளோரன்ஸ் பக் ஆகியோரைக் கொண்ட ஆறு-எபிசோட் தொடரானது நவம்பர் 24 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பிரத்தியேகமாக ஒளிபரப்பாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ‌‌

தனது குடும்பத்தைக் காண செல்லும் ஹாக்ஐயின் பயனத்தை 24 நவம்பர் அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் காணத் தயாராகுங்கள்