ஜெயிலர் படத்தில் நடிக்க ரெடின் கிங்ஸ்லி வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர்.

எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தனர். மேலும் மோகன் லால், சிவராஜ் குமார் போன்றவர்கள் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தனர்.

மேலும் ரெடின் கிங்ஸ்லி இந்த படத்தில் நடித்து இருந்தார். ஜெயிலர் படத்திற்காக ஒவ்வொருவரும் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளிவரும் நிலையில் தற்போது ரெடின் கிங்ஸ்லி சம்பளம் குறித்து தெரிய வந்துள்ளது.

ஆமாம், இந்த படத்துக்காக அவர் ரூ 25 லட்சம் சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. வில்லனாக நடித்த விநாயகன் ரூ 30 லட்சம் சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகிய நிலையில் ரெடின் கிங்ஸ்லி சம்பள விவரம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.