நடிகர் விஜயை ஹீரோவாக மனதில் நினைத்து எழுதிய படம் ரெட் ஃபிளவர்: இயக்குனர் ஆண்ட்ரு பாண்டியன் பேச்சு..!

ரெட் ஃபிளவர் திரைப்படம் நடிகர் விஜய் ஹீரோவாக மனதில் கொண்டு எழுதப்பட்ட கதை என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட் ஃபிளவர். ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரித்துள்ள இந்த படத்தில் நடிகர் விக்னேஷ் ஹீரோவாக நடித்துள்ளார்.
விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இயக்குனர் படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதாவது இயக்குனர் கதையை எழுதும்போது விஜய் சாரை மனதில் ஹீரோவாக கற்பனையாக கொண்டு தான் எழுதினேன் மூன்றாம் உலகப்போரில் இருந்து நம் நாடு இந்தியாவை காப்பாற்றும் ஒரு சீக்ரெட் ஏஜென்ட்டாக இந்த கதாபாத்திரத்தை வடிவமைத்திருந்தேன் விஜய் சாரின் பாடி லாங்குவேஜ் ஆற்றல் மற்றும் சக்தி வாய்ந்த திரை இருப்பு ஆகியவை கதாபாத்திரத்திற்கு ஒரு உத்வேகமாக இருந்தன.
இது மட்டும் இல்லாமல் படத்தில் மொத்தம் ஒன்பது சண்டைக்காட்சிகள் இருப்பதாகவும் 95 நிமிடங்கள் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மற்றும் மூன்று பாடல்கள் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.
இவர் கூறிய இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகரிக்கச் செய்துள்ளது.
