முதல் வாரமே போட்டியாளர் ஒருவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் முதல் வார எலிமினேஷன் நாளை நடைபெற உள்ளது.
எலிமினேஷனில் சாந்தி குறைந்த ஓட்டுக்களை பெற்றுள்ளார் என தகவல்கள் வெளியாகி இருந்தன. இன்னொரு பக்கம் கன்ஃபெக்சன் ரூமில் ஜி பி முத்து நான் வீட்டுக்கு கிளம்புகிறேன் என சொல்ல பிக் பாஸ் இனிய முடிவு உங்களுடையது வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லிவிட்டு வெளியே வாருங்கள் என பேசுவது போன்ற வீடியோ வெளியாகி இருந்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் கமல்ஹாசன் ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்றால் யாருக்கு கொடுக்க வேண்டும் என கேட்க ஒட்டுமொத்த போட்டியாளர்களும் அசிமை காட்டுகின்றனர். இதனால் அவர் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேறலாம் என சொல்லப்படுகிறது.
இது குறித்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ பாருங்க