Red Card Eviction for Balaji Murugadoss

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர்கள் ரெக்கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Red Card Eviction for Balaji Murugadoss : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சி போட்டியாளராக பங்கேற்றுள்ள பாலாஜி தொடர்ந்து போட்டியாளர்கள் ஒவ்வொருவுடனான பிரச்சனையில் சிக்கி வருகிறார்.

சனம் ஷெட்டியுடன் இவருக்கு மோதல் ஏற்பட்டிருந்த நிலையில் அவரை தகாத வார்த்தையில் திட்டினார். மேலும் பாலாஜி தன்னை அட்ஜஸ்ட்மெண்ட் செய்து அழகி பட்டத்தை வென்றதாக கூறியிருந்தார்.

அவன் எப்படி என்னைப் பார்த்து அப்படி சொல்லலாம்? என குறை தீர்க்கும் டாஸ்க்காக எழுதப்பட்ட கட்டுரையில் எழுதியிருந்தார் சனம். இந்த காட்சி ப்ரோமோ வீடியோவில் இடம் பெற்றிருந்தது. ஆனால் விஜய் டிவி சர்ச்சைகள் எழுந்ததால் இந்த ப்ரோமோ வீடியோவை டெலிட் செய்து விட்டது.

பாலாஜி முருகதாசுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் அதிகம் பரவி வருவதால் அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற நிறைவேற்றிக்கொள்ள திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அதேசமயம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தற்போது டிஆர்பி கிங்காக இருப்பவர் பாலாஜிதான் என்பதால் அவரை நிச்சயம் வெளியேற்ற மாட்டார்கள் எனவும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இறுதியில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.