
பிக் பாஸ் சீசன் 7-க்கு புதிய பிரச்சனை உருவாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை ஆறு சீசன்களை நிறைவு செய்துள்ளது.

ஆறு சீசன்களின் வெற்றியை தொடர்ந்து விரைவில் ஏழாவது சீசன் தொடங்க உள்ளதாக தகவல் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இதில் யார் யார் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.
ஆனால் இந்த முறை பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகைகள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன்னதாக கலந்து கொண்ட பிரபலங்கள் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்த காரணத்தினால் கலந்து கொள்ள பலரும் தயக்கம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த விஷயம் அறிந்த ரசிகர்கள் இப்படியே போனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை இழுத்து மூட வேண்டியது தான் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
