விடாமுயற்சி விபத்து வீடியோவை விட காரணம் என்னவென தெரிவித்துள்ளார் சுரேஷ் சந்திரா.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர் தற்போது லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக்கி வரும் விடா முயற்சி என்ற படத்தில் நடித்து வருகின்றார்.
இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுரேஷ் சந்திரா விடாமுயற்சி பட சூட்டிங் நடந்த விபத்து வீடியோவை வெளியிட்டிருந்தார்.
இதற்கான காரணம் என்ன என்பது குறித்து தற்போது பேசியுள்ளார். அதாவது அஜித் தான் இந்த வீடியோவை வெளியிட சொன்னதாக தெரிவித்துள்ளார். ஷூட்டிங்கில் அஜித் காரை வேகமாக ஓட்டும் போது ஸ்கிட்டாகி பழத்தில் கவிழ்ந்து விட்டது. அது ஹம்மர் கார் என்பதால் பெரிய பாதிப்பு இல்லாமல் அஜித் வெளியே வந்துவிட்டார்.
படக்குழு இப்படி உயிரைக் கொடுத்து வேலை செய்து வரும் போது படம் டிராப் ஆகிவிட்டது என தகவல் பரப்பினால் எல்லோருக்கும் மனசு கஷ்டமாக இருக்கும் அல்லவா? அதனால் தான் ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் தெம்பு அளிக்கும் விதமாக இந்த வீடியோவை வெளியிட்டோம்.
நாடாளுமன்றத் தேர்தலில் நடந்து முடிந்த பிறகு படக்குழு மீண்டும் சூட்டிங் செல்ல உள்ளனர், அஜித்தின் பிறந்தநாளான மே ஒன்றாம் தேதி படத்தின் அப்டேட் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.