Rashmika to join Karthi film : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Karthi, rashmika mandanna

Rashmika to join Karthi film :

தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் என தொடர்ந்து இரண்டு வெற்றி படங்களை கொடுத்த கார்த்தியின் கேரியரில் தேவ் ஒரு சின்ன சறுக்கலை சந்தித்தது.

அதன் பின் சுதாரித்துக் கொண்ட கார்த்தி, தற்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேடிப் பிடித்து நடித்து வருகிறார். அந்த வகையில் மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜின் கைதி படத்தில் நடித்து வருகிறார்.

யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்த நிஷா, வீடியோ வெளியிட்டு அசிங்கப்படுத்திய மணிமேகலை – வீடியோவை பாருங்க.!

இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி பெரிதளவில் பேசப்பட்டது. இதை தொடர்ந்து ரெமோ பாக்யராஜ் கண்ணன் இயக்கத்திலும் கார்த்தி ஒரு படத்தில் நடிக்கின்றார்.

இப்படத்தில் அவரது ஜோடியாக இன்கேம் இன்கேம் புகழ் ராஷ்மிகா நடித்து வருகிறார். தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜுலை 10-ம் தேதி தொடங்குகிறதாம்.

இதில் ராக்‌ஷ்மிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.