நடிகை ராஷ்மிகா தனது இளம் வயதில் நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் தற்போது டாப் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர்தான் ராஷ்மிகா மந்தனா. தற்போது ரசிகர்களின் லேட்டஸ்ட் கரஷ் ஆக மாறியிருக்கும் இவர் தெலுங்கில் விஜய் தேவர் கொண்டவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் பல ரசிகர்களுக்கு பரிச்சயமானார். அதன் பிறகு தமிழில் கார்த்தியின் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் மீண்டும் தமிழ், தெலுங்கு என பழமொழிகளில் வெளியாகி மாபெரும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த புஷ்பா தி ரைஸ் என்று அல்லு அர்ஜுனின் திரைப்படத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி பல ரசிகர்களின் மனதில் லேட்டஸ்ட் கரஷ் ஆக வலம் வருகிறார்.

தற்போது தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் இவர் அப்படத்தை தொடர்ந்து புஷ்பா 2, மிஷன் மஜ்னு படங்களில் நடித்து வருகிறார். இப்படி பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தனாவின் இளம் வயது புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் ராஷ்மிகா அவரது நண்பர்களுடன் மாடர்ன் ஆன உடையில் செல்ஃபி புகைப்படம் எடுத்துள்ளார். அப்புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.