நடிகை ராஷ்மிகா மந்தனாவின் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது விஜயின் வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். புஷ்பா திரைப்படத்தின் மூலம் அதிக அளவில் பிரபலமான இவர் தற்பொழுது இளைஞர்களின் மனதில் லேட்டஸ்ட் கிரஷ் ஆக வலம் வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் ஹிந்தியில் “குட் பை” என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த இடத்தில் கூட மேக்கப்பா!!! இது புதுசா இருக்கே - ராஷ்மிகாவின் புதிய வீடியோ!.

தற்போது பழமொழி படங்களில் பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் ஆன புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வரும். அந்த வகையில் தற்போது விமானத்தில் பறந்து கொண்டே நடிகை ராஸ்மிகாவுக்கு மேக்கப் ஆர்டிஸ்ட் மேக்கப் போட்டுக் கொண்டிருக்கும் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

https://youtube.com/shorts/3O1ZDrPi0GA?feature=share