பிக் பாஸ் நிகழ்ச்சியின் கொண்டாட்டத்தை ரேஷ்மா தவிர்த்துள்ளார், அதற்கான காரணத்தை அவரே தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகையாக, ஆங்கில டிவி சேனலில் செய்தி வாசிப்பாளராக தெலுங்குவில் தொகுப்பாளாராக வலம் வந்தவர் ரேஷ்மா.
பாபி சிம்ஹாவின் சொந்த அக்காவான இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார்.
சில வாரங்களிலேயே பிக் பாஸில் இருந்து வெளியேறிய ரேஷ்மா சமீபத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதற்கான காரணத்தை அவரே குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக அவர் இன்ஸ்டாவில் போட்டோ ஒன்றை வெளியிட்டு நான் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறேன், அதனால் தான் பிக் பாஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என விளக்கம் கொடுத்துள்ளார்.