Pa Ranjith Hindhi Movie

Ranjith Hindhi Movie : 2012-ம் ஆண்டு எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி வெளியாகி மாபெரும் வெற்றியை பதிவு செய்த படம் அட்டகத்தி. இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பா. ரஞ்சித்.

முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத தலித் மக்களின் எதார்த்த வாழ்வியலை ஜனரஞ்சக சினிமாவுக்கான மொழியில் பேசி கவனம் ஈர்த்தார்.

இன்னமும் ஓயாத விஸ்வாசம் அலை – இப்ப என்ன தெரியுமா?

6 ஆண்டுகள் நான்கே படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக மாறியிருக்கும் பா. ரஞ்சித் அடுத்ததாக பாலிவுட்டில் கால் தடம் பதிக்க இருக்கிறார்.

பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான Namah Pictures தயாரிக்கும் அடுத்த படத்தை ரஞ்சித் இயக்கவுள்ளார்.

இன்னும் நடிகர்கள் முடிவாகத நிலையில் இது பழங்குடியினரின் சுதந்திரத்திற்காக போராடிய பிர்சா முன்டாவின் வாழ்க்கை கதையைக் கொண்டு உருவாகும் மெகா பட்ஜெட் படம் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் இப்படம் முழுக்க முழுக்க ராஞ்ச்சியில் படமாக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு தான் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனி பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.