Viswasam Remake | Thala | Ajith | Vivegam

Viswasam Remake : அஜித் நடிப்பில் வசூலில் பல சாதனைகளை புரிந்த படம் விஸ்வாசம். விவேகம் படத்தின் தோல்விக்குப் பிறகு அஜித் களமிறங்குவதாலும் மேலும் அஜித் – சிவா கூட்டணி நான்காவது முறை இணைந்திருப்பதாலும் விஸ்வாசம் படத்திற்கு அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது.

அதை முழுவதுமாக பூர்த்தி செய்ததால் படம் தாறுமாறு வெற்றியை பெற்றது. உலகளவில் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 160 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படம் எனும் பிரம்மாண்ட சாதனையை நிகழ்த்தியது.

10 நாட்களில் காஞ்சனா 3 வசூல் – பிரம்மிப்பில் திரையுலகம்.!

இத்தனைக்கும் அதேநாளில் ரஜினி – சன் பிக்ச்சர்ஸ் எனும் பிரம்மாண்ட கூட்டணியுடன் போட்டிபோட்டு அஜித் இந்த வெற்றியை ருசித்துள்ளார் என்பது அவரது செல்வாக்கை உணர்த்துகிறது.

இப்படி பல சிறப்புகளைக் கொண்ட விஸ்வாசம் படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்ய தற்போது தயாரிப்பு தரப்பு தயாராகி வருகிறதாம். இதற்காக கன்னட சூப்பர் ஸ்டார்களிடம் பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருகிறதாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.