Rangaraj Pandey

Rangaraj Pandey : தல படத்திற்கு பிறகு இப்படியெல்லாம் தான் வாய்ப்பு வருது என ரங்கராஜ் பாண்டே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

பிரபல தொலைக்காட்சி சேனலில் தலைமை செய்தியாளராக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரங்கராஜ் பாண்டே.

அஜித்துனாலே கெத்து தான், பிரபல நடிகை ட்வீட் – யாருனு நீங்களே பாருங்க.!

இவர் தற்போது தல அஜித்தின் அடுத்த படமான தல 59 மூலம் வெள்ளித்திரையில் கால் பதிக்க உள்ளார். இது குறித்து அவரும் ஒரு வீடியோவை வெளியிட்டு கூறியிருந்தார்.

இந்த வீடியோ வெளியிட்ட சில மணி நிமிடங்களிலேயே 84,000 லைக்ஸ்கள் கிடைத்து விட்டன. மேலும் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமான பிறகு அவருக்கு அதிக வாய்ப்புகள் தேடி வந்துள்ளன.

OMG.. அயன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா? இப்படி மிஸ் பண்ணிட்டாரே.!

அதில் முறுக்கு கம்பி விளம்பரம் ஒன்று. இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தல படத்தில் கமிட்டான பிறகு நிறைய வாய்ப்புகள் வருகின்றன.

அதே சமயம் இரும்பு முறுக்கு கம்பி விளம்பரத்தில் எல்லாம் நடிக்க கூப்பிடுகிறார்கள் என கலகலப்பாக பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.