Ajith

Ajith Circular Reaction : அஜித்துனாலே கெத்து தான் என பிரபல நடிகை ட்வீட் செய்து தெறிக்க விட்டுள்ளார். அந்த ட்வீட் தற்போது வேகமாக பரவி வருகிறது.

தல அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் திருப்பூரில் சுமார் 100 பேர் தமிழிசையின் முன்னிலையில் பாஜகவில் இணைந்திருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை தல அஜித் தான் நேர்மையானவர். அவருடைய ரசிகர்களும் நல்லவர்கள்.

மோடியின் திட்டங்களை அஜித் ரசிகர்கள் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இதனையடுத்து தல அஜித் அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டு எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. என்னுடைய பெயரையும் என் ரசிகர்கள் பெயரையும் அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம் என கூறியிருந்தார்.

இந்த அறிக்கைக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் பிரபல நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான ஆர்த்தி தல அஜித்துனாலே கெத்து தான் என கருத்து தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.