
நடிகர் திலக்கின் மகனுடைய போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் ரமேஷ் திலக். ஆர் ஜே வாக பணியாற்றி வந்த இவர் குறும்படங்களில் நடித்து அதன் பிறகு தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆனார்.
தொடர்ந்து நல்ல நல்ல கதையாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் இறுதியாக குட் நைட் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் இவர் தன்னுடன் ஆர்.ஜேவாக பணியாற்றிய நவலட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறான்.
தற்போது மூவரும் குடும்பமாக சிங்கப்பூர் சுற்றுலா சென்ற போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ரமேஷ் திலக்கிற்கு இவ்வளவு பெரிய பையன் இருக்கானா என ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.