Ramesh Kanna Advice to Ajith
Ramesh Kanna Advice to Ajith

அஜித் ஷாலினியை காதல் என்பது தெரியாமல் அவரிடம் தான் கூறியதை பற்றி பேசியுள்ளார் ரமேஷ் கண்ணா.

Ramesh Kanna Advice to Ajith : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஷாலினி தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சில வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். இவர் விஜயுடன் இணைந்து நடித்த காதலுக்கு மரியாதை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

அதன் பின்னர் அஜித்துடன் இணைந்து நடித்து அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திடீர் மோதல் : சூர்யா, சிம்புவை வம்பிழுக்கும் தனுஷ் ரசிகர்கள் – காரணம் என்ன? ட்ரெண்டாகும் ஹாஸ்டேக்.!

அஜித்துடன் ஷாலினி நடிக்கும்போது இவர்கள் காதலிப்பது தெரியாமல் நான் அஜித்தை அழைத்து இங்க பாருப்பா கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப் பட்டால் அந்த குடும்பப் பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்க, நடிகைகள் வேண்டாம் எனக் கூறினேன்.

அதன் பின்னர் தான் இயக்குனர் சரண் என்னை அழைத்து சார் அவங்க ரெண்டு பேரும் காதலிக்கிறாங்க அப்படி எல்லாம் பேசாதீர்கள் என கூறினார். அதன் பின்னர் தான் அவர்கள் இருவரும் காதலர்கள் என்பது எனக்கு தெரிந்தது என்று பேசியுள்ளார் ரமேஷ் கண்ணா.