ரஜினிக்கு இந்த மாதிரி நடிக்க தைரியம் இருக்கா என அல்லு அர்ஜுன் பட ட்ரெய்லரை வைத்து சவால் விட்டுள்ளார் சர்ச்சை இயக்குனர் ஒருவர்.

Ram Gopal Varma Question to Rajinikanth : தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா, இரண்டு பாகமாக வெளியாகவுள்ள இந்த படத்தில் பகத் பாசில் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவர் ஆகவும் செம்மர கடத்தல் தொழில் செய்பவராகவும் நடித்துள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் சர்ச்சைக்குரிய இயக்குனரான ராம்கோபால் வர்மா இந்த ட்ரெய்லரை வெளியிட்டு அல்லு அர்ஜுன் என்ற சூப்பர் ஸ்டாராக மட்டும்தான் இதுபோன்ற கதாபாத்திரங்களில் துணிந்து நடிக்க முடியும்.

ரஜினிகாந்த், பவன் கல்யாண், சிரஞ்சீவி மற்றும் மகேஷ்பாபு போன்ற நடிகர்களுக்கு இது போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க தைரியம் இருக்கிறதா என கேள்வி எழுப்பி அந்த பதிவை பதிவு செய்துள்ளார். இவருடைய இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Maanaadu OTT-யில் நல்ல லாபம் – K Rajan Bold Speech at Muddy Trailer Launch | HD

நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி : மூத்த அமைச்சர்களுடன், பிரதமர் மோடி ஆலோசனை

சர்ச்சைக்கு பெயர் போன ராம்கோபால் வர்மா தமிழ் சினிமாவின் சூர்யா நடிப்பில் வெளியாகி தோல்வியை தழுவிய ரத்த சரித்திரம் என்ற படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.