நடிகை ரகுல் ப்ரீத் சிங் அளித்திருக்கும் பேட்டியின் தகவல் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கு திரை உலகில் பிரபலமான இவர் தமிழில் தேவ், தீரன் அதிகாரம் ஒன்று, NGK உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து அனைவருக்கும் பரிச்சயமானார். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் அயலான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

இப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வரும் இவர் சமீபத்திய பேட்டியில் உண்மையான காதல் குறித்து விளக்கம் அளித்திருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.

அதில் அவர், காதலுக்கு எவ்வித நிபந்தனையும் இருக்காது. நீங்கள் உண்மையாக காதலித்தால் நீங்கள் நீங்களாகவே இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் ஒரு சிலர் காதலை தவறான முறையில் பயன்படுத்துகிறார்கள். அதாவது காதலித்தவரை சுதந்திரமாக வளர விடாமல் தங்களுக்கு பிடித்தபடி இருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி வருகிறார்கள். என்று அப்பேட்டியில் கூறியிருக்கிறார்.