வாரிசு இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்க இருக்கும் பிரபல தொகுப்பாளர் வெளியிட்ட பதிவு நீக்கப்பட்டுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருக்கிறார்.

அண்மையில் இப்படத்தில் இருந்து வெளியான இரண்டு பாடல்களும் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்து இணையதளத்தை தெறிக்க விட்டு வரும் நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி வைரலாகி உள்ளது.

இது தொடர்பான எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பும் இதுவரை படக்குழு வெளியிடாமல் இருந்த நிலையில் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக பிரபல விஜய் டிவி நட்சத்திரம் ராஜு ஜெயமோகன் அவர்கள் தொகுத்து வழங்க இருப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவின் மூலம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால் இப்பதிவை அவர் உடனடியாக நீக்கி இருக்கிறார். இருப்பினும் இவர் பகிர்ந்து உள்ள இந்த தகவல் ரசிகர்களின் மத்தியில் பயங்கரமாக வைரலாகி இணையத்தில் தீயாக பரவி வருகிறது.