இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோவில் மாஸ் காட்டும் ரஞ்சிதமே பாடல்.

ரசிகர்களால் அன்போடு தளபதி என்று அழைக்கப்பட்டு வரும் தளபதி விஜய் அவர்கள் வம்சி இயக்கத்தில் உருவாகும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகியுள்ளது.

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ வழங்க இருக்கும் இப்படத்தில் தமன் இசையில் அண்மையில் வெளியான இரண்டு சிங்கிள் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இணையதளத்தை தெறிக்க விட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான ரஞ்சிதமே பாடல் தற்போது வரை instagram பக்கத்தில் ரசிகர்களால் அதிக அளவில் ரீல்ஸ் வீடியோ செய்யப்பட்டு 100k தாண்டியுள்ளது. இந்த தகவலை படக்குழு மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளது.