நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தை கண்டு களித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஜெயிலர் திரைப்படம் வரும் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். மாபெரும் நட்சத்திரபட்டாலங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் உள்ளிட்டவை இணையத்தில் வெளியாகி ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதுபோக இப்படத்தை பிரமோஷன் செய்யும் வகையில் படக்குழு அவ்வப்போது சிறு சிறு வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் ஜெய்லர் படத்தை பார்த்து ரசித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே டப்பிங் பணிகள் போது படத்தைப் பார்த்து ரஜினி தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்த பிறகு முழு படத்தையும் மீண்டும் ஒரு முறை ரசித்துப் பார்த்திருப்பதாக கூறப்படும் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகரிக்க செய்துள்ளது.