உத்தரப்பிரதேச முதல்வர் யோகி காலில் விழுந்தது ஏன் என ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலில் வெற்றி நடை போட்டு வரும் நிலையில் இவர் இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டு இருந்தார்.

அதன் பிறகு உத்தரப்பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேசிய போது அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். ரஜினி தன்னைவிட வயது குறைவான யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த விஷயம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியது.

இப்படியான நிலையில் இந்த விவாதங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது ஏன் என விளக்கம் அளித்துள்ளார் ரஜினி. அதாவது வயது குறைவாக உள்ளவராக இருந்தாலும் சன்னியாசிகளின் காலில் விழுவது என்னுடைய பழக்கம் என தெரிவித்துள்ளார்.

இவருடைய இந்த விளக்கம் சமூக வலைதளங்களில் மேலும் விவாதத்தை பெரிதாக்கி உள்ளது. ரஜினியின் இந்த விளக்கம் குறித்து உங்களது கருத்து என்ன என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க