Pushpa 2

அலங்கு படத்தின் டிரைலரை பார்த்து படக்குழுவை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!

அலங்கு படத்தின் டிரைலரை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பட குழுவை பாராட்டியுள்ளார்.

Superstar Rajinikanth praised the film crew after watching the trailer of Alangu

“உறுமீன்”.. “பயணிகள் கவனிக்கவும்” போன்ற திரைப்படங்களை இயக்கிய எஸ். பி சக்திவேல் அலங்கு படத்தை இயக்கியுள்ளார். டிஜி பிலிம் கம்பெனி மற்றும் மேக்னாஸ் புரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

மேலும் கதை நாயகனாக குணாநிதி, அவர்களுடன் செம்பன் வினோத், காளி வெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர், முக்கிய கதாபாத்திரத்தில் நாய் ஒன்றும் வருகிறது.

மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இருக்கும் பாசம் உறவு எப்படி ஒரு சம்பவத்தின் மூலம் பகையாக மோதலாக மாறுகிறது என்பதை வைத்து இந்தத் திரைக்கதை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் அலங்கு பட குழு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளது. அலங்கு படத்தின் டிரைலரைப் பார்த்த ரஜினிகாந்த் இயக்குனர் சக்தியை சூப்பர்.. நைஸ் என பாராட்டியுள்ளார். இது மட்டுமில்லாமல் இந்த படத்தின் ட்ரைலர் வெளியிட்டு உள்ளார்.

இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.