என்றும் ரசிகர்களை மனதில் வைத்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த் குறித்து சுவாரசியமான தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரை உலகில் என்றும் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்பொழுது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது நடிப்பில் பெரிய பிரேக்காக அமைந்திருந்த சிவாஜி திரைப்படம் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றை தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்து இருக்கிறார்.

என்றும் ரசிகர்களை மனதில் வைத்திருக்கும் ரஜினிகாந்த்!!… எடுத்துக்காட்டு தகவல் இதோ!.

அதாவது நடிகர் ரஜினிகாந்த், ஸ்ரியா, விவேக், சுமன், ஆகியோரின் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “சிவாஜி”. சங்கர் இயக்கத்தில் உருவான இப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த திரைப்படம் வெளிவந்தபோது ஒரு பிரபல செண்ட் நிறுவனம், அத்திரைப்படத்தில் இடம்பெற்ற ரஜினியின் புகைப்படம் ஒன்றை தனது நிறுவனத்தின் விளம்பரத்திற்காக பயன்படுத்த வேண்டி தயாரிப்பாளர் ஏவிஎம் குகனை அணுகியுள்ளது.
மேலும் இந்த புகைப்படத்திற்காக ஒரு கோடி விலையும் பேசப்பட்டது.

என்றும் ரசிகர்களை மனதில் வைத்திருக்கும் ரஜினிகாந்த்!!… எடுத்துக்காட்டு தகவல் இதோ!.

ஆனால் ரஜினி இதனை மறுத்துவிட்டாராம். ஏனென்றால் “என்னுடைய ரசிகர்கள் எனது நடிப்பை பார்க்கத்தான் சினிமாவிற்கு வருகிறார்கள். இந்த செண்ட் விளம்பரத்தில் எனது புகைப்படம் இடம்பெற்றால், நான் இந்த செண்ட்டைத்தான் பயன்படுத்துகிறேன் என அவர்கள் நினைத்துக்கொள்வார்கள். அவர்களை நான் ஏமாற்ற விரும்பவில்லை” என்று ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். இப்படி என்றும் ரசிகர்களை தனது மனதில் வைத்துக் கொண்டு செயல்பட்டு வரும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்த இந்த சுவாரசியமான தகவல் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.