இமயமலைக்கு புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் பேட்டியின் தகவல் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ரஜினிகாந்த். பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் இவரது நடிப்பில் வரும் 10 ஆம் தேதியான நாளை ஜெயிலர் திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஜெய்லர் படம் வெளியாவதற்கு முன்பே இமயமலைக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அதன்படி, நேற்று தனது மனைவியுடன் மாலை 6:00 மணி அளவில் தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் குடும்பத்துடன் சன் டிவி அலுவலகத்தில் ஜெயிலர் திரைப்படத்தை கண்டு களித்த நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு இன்று காலை 8 மணிக்கு அவர் தனது வீட்டில் இருந்து விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டு சென்றார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், கொரோனா காரணத்தால் நான்கு ஆண்டுகள் இமயமலைக்கு செல்ல முடியவில்லை என்று கூறியுள்ளார். அதன் பிறகு ஜெயிலர் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார். இவரது இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.