சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரத்த நாளத்தில் திசுக்கள் பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rajinikanth in Health Issue Details : தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் திடீரென இவர் நேற்று மாலை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா-சூரசம்ஹாரம் : பக்தர்களுக்கு அனுமதி?

சாதாரண சிகிச்சைக்காக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது ரத்தக்குழாய்க்கு போதிய ரத்தம் செல்லாததால் திசுக்கள் இறந்து போகும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான உரிய சிகிச்சையை உடனடியாக எடுத்தால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் மீண்டு வந்து விடலாம். அதற்கான சிகிச்சை தான் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அளிக்கப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

மருத்துவமனையில் Rajinikanth அனுமதிக்க இதுதான் காரணமா? – வெளியான புதிய தகவல் | HD

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.