Dhanusu Rasi Neyargale
தனுசு ராசி நேயர்களே படத்தின் டீசரை பார்த்து பாராட்டியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலமாக அறிமுகமாகி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஹாரிஷ் கல்யாண்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பியார் பிரேம காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என இரண்டு வெற்றி படங்களை கொடுத்த ஹரிஷ் தற்போது தனுசு ராசி நேயர்களே என்ற படத்தில் நடித்துள்ளார்.

சஞ்சய் பாரதி இயக்கியுள்ள இந்த படம் வரும் டிசம்பர் 6-ம் தேதி முதல் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தின் டீசரை பார்த்து ஹரிஷ் கல்யானையும் படக்குழுவையும் பாராட்டியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் பாராட்டால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.