ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் அமிதாப் பச்சன்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகிய வெற்றி பெற்ற ஜெயிலர் படத்தை தொடர்ந்து தற்போது தலைவர் 170 திரைப்படம் உருவாகி வருகிறது.

ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் அமிதாப் பச்சன் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். 33 வருடங்களுக்கு முன்னர் பாலிவுட் படத்தில் இருவரும் இணைந்து நடித்த நிலையில் தற்போது இணைந்து நடிப்பது குறித்து ரஜினி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

இதனால் ரசிகர்களுக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.