விக்ரம் படத்தை பார்த்து ரஜினி சொன்ன விமர்சனம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் விக்ரம்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா, நரேன் என பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார்.

ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றியைப் பெற்ற இந்த படத்தை பார்த்த ரஜினி கமலுக்கு போன் போட்டு சூப்பர் கமல், கலக்கிட்டீங்க.. படம் செமயாக இருக்கு என பாராட்டி உள்ளார். மேலும் படக்குழுவினரையும் ரஜினி பாராட்டி உள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.