Web Ads

ரஜினி-சுந்தர்.சி இணையும் படத்தின் டைட்டில், அப்டேட்ஸ்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து, தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.

இதனிடையில் ரஜினி- கமல் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பும் நெல்சனுக்கு கிடைத்துள்ளதாகவும், அவர் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ரஜினி நடிப்பில் சுந்தர்.சி இயக்கவிருக்கும் படம் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது ‘தலைவர் 173’ டைட்டில் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. சந்தர்.சி இயக்கத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு கத்தி, இரத்தம், வைலென்ஸ் இல்லாமல், கலப்பான ஜாலியான படத்தில் ரஜினியை பார்க்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்துகள் பகிர்ந்து வருகின்றனர்.

இச்சூழலில் ‘தலைவர் 173’ படத்துக்கு ரஜினியின் கேரக்டர் பெயரையே டைட்டிலாக வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவ்வகையில் தற்போது சுந்தர்.சி இயக்கும் படத்துக்கு முன்னதாக வெளியான ‘அருணாச்சலம்’ மாதிரி ஒரு டைட்டில் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான ‘அருணாச்சலம்’ திரைப்படத்தை அடுத்து 28 ஆண்டுகள் கழித்து ரஜினி-சுந்தர்.சி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

rajini in thalaivar 173 directed by sundar c movie title details
rajini in thalaivar 173 directed by sundar c movie title details