சரவணனுக்கு தெரியாமல் சந்தியா செய்த வேலையால் வீட்டில் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருக்க அர்ச்சனா புலம்புகிறார்.

Raja Rani2 Episode Update 03.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் செந்தில் கடையில் அமோகமாக விற்பனையாவதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். உடனே கடையில் இருக்கும் பையனை அழைத்து கடையை கொஞ்ச நேரம் பார்த்து நான் சரவணன் கடை வரைக்கும் போயிட்டு வருகிறேன் என சொல்லிவிட்டு செல்கிறார்.

சக்தி எனப்படுவது யாதெனின்..

சரவணனுக்கு தெரியாமல் சந்தியா செய்த வேலை.. அர்ச்சனாவின் திட்டத்தால் அதிர்ச்சியான செந்தில் - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

அங்கு சென்று பார்த்தால் சரவணன் கடையில் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் ஒருவர் ஸ்வீட்டை மட்டும் வாங்கிக்கொண்டு பணம் கொடுக்காமல் போவதை கண்டு பிடித்த செந்தில் அவரை நிறுத்தி நீங்க வாங்கிய ஸ்வீட்க்கு பணம் கொடுத்தீங்களா என கேட்கிறார். உடனே அர்ச்சனா அங்கு ஓடிவந்து அவர் கஸ்டமர் அவருகிட்ட எதுக்கு கேட்டுட்டு இருக்கீங்க என கேட்கிறார். பணம் கொடுக்காம ஸ்வீட் வாங்கிட்டு போகிறார் என செந்தில் சொல்ல புடவையும் வாங்கிட்டு ஸ்வீட்டுக்கு பணமும் கொடுப்பாங்களா. புடவை வாங்கினால் ஸ்வீட் ப்ரீனு நீங்கதானே ஆஃபர் விட்டீங்க. கல்லால உக்காந்திட்டு பணம் வாங்கி போட்ட உங்களுக்கு தெரியாதா என கோபப்பட்டு விட்டு அவர் கிளம்புகிறார்.

உடனே செந்தில் அர்ச்சனாவை பிடித்து சத்தம் போடுகிறார். சரவணனுக்கு தெரிஞ்சா என்ன பதில் சொல்றது. நம்ம கடையில கல்லா கட்டுது தான். சரவணன் கடையில் பணம் இல்லைன்னு கேட்டா என்ன பதில் சொல்றது. இதுக்குத்தான் நீ அடம் பிடிச்சு சரவணன் கடைக்கு வந்தயா என திட்டுகிறார். கடையில் வேலை செய்யும் செல்வத்திடம் நீயாவது சொல்லக்கூடாதா என கேட்க நான் சொன்னேன் அவங்க தான் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லிட்டாங்க என போட்டு கொடுத்து விடுகிறார்.

பிறகு அர்ச்சனா செந்திலிடம் நான் நல்லதுதான் பண்றேன். இன்னைக்கு சரவணன் கடைக்கு நஷ்டம் வந்தாலும் நாளைக்கு அவர் கடையில நல்ல லாபம் வரும். இப்ப வந்துட்டு போற பாதிப்பேர் அவருக்கு ரெகுலர் கஸ்டமரா ஆகிடுவாங்க என கூறுகிறார். மேலும் இன்னைக்கும் ஒரு மாடர்ன் டிரஸ் எடுத்து வச்சிருக்கேன் என சொல்லி செந்தில் மனசை மாற்றுகிறார். நீ சொல்லுறதும் சரியாதான் இருக்கு என செந்தில் கடைக்கு சென்று விடுகிறார்.

அஜித்தே சொன்னாலும் நாங்க Thala-ன்னு தான் கூப்பிடுவோம் – Actor Sendrayan Exclusive Speech

பார்வதியின் முன்னாள் காதலர் விக்கி பார்வதியும் பாஸ்கரும் வெளியே போவதை பின் தொடர்ந்து அந்த இடத்தில் ஆட்களை வைத்து பாஸ்கரை சுயநினைவு இல்லாத அளவிற்கு அடித்துப் போட்டுவிட்டு அவன் கண் முழிக்கும் போது பார்வதி உடம்பில் துணி கூட இல்லாமல் செய்து அவர்கள் இருவரையும் பிரிக்க திட்டமிட்டிருப்பதாக தன்னுடைய நண்பரிடம் கூறுகிறார்.

இந்த பக்கம் சந்தியாவும் சரவணனும் ஹோட்டலில் அமர்ந்து கொண்டு காபி குடித்துக் கொண்டிருக்கும்போது சரவணன் முகம் வாடிப்போய் இருப்பதை கண்டு சந்தியா என்ன ஏது என கேட்க ஒண்ணுமில்ல என கூறுகிறார். வீட்டு ஞாபகம் வந்துவிட்டதா என கேட்க சரவணன் ஆமாம் இவ்வளவு பெரிய ஹோட்டல்ல எல்லாம் நாம போய் சாப்பிட முடியுமோ. இலவசமா ஒரு வாய்ப்பு கிடைக்கும் வீட்ல இருக்காங்களால வர முடியல என கஷ்டப்படுகிறார். பிறகு வீட்டுக்கு போன் செய்து அனைவருக்கும் ட்ரெயின் டிக்கெட் போட்டிருப்பதையும் சரவணனுக்கு இது தெரியாது சர்ப்ரைசாக இருக்கட்டும் என கூறுகிறார். இதனால் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

சரவணனுக்கு தெரியாமல் சந்தியா செய்த வேலை.. அர்ச்சனாவின் திட்டத்தால் அதிர்ச்சியான செந்தில் - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

அதேசமயம் சிவகாமி நான் வரவில்லை. கோவிலில் பூஜை இருக்கு அதை நான் செய்தே ஆகவேண்டும் நீங்க எல்லோரும் போயிட்டு வாங்க என கூறி விடுகிறார். பிறகு எல்லோரும் சென்னைக்கு கிளம்ப தயாராகின்றனர். அர்ச்சனா எல்லோருக்கும் ஃப்லைட் டிக்கெட் கொடுத்து இருக்காங்க போல சந்தியா திட்டம் போட்டு அவ மட்டும் ப்லைட்ல போயிட்டு நமக்கு ட்ரெயின் டிக்கெட் போட்டு இருக்கா என கூறுகிறார். இப்படியே பொலம்பிட்டு இருந்தா டிரெயின் தான் நம்மள விட்டு கிளம்பும் என செந்தில் கூறிவிட்டு உள்ளே சென்று விடுகிறார்.

அங்க போனதும் சந்தியா சைட்ல வந்தது எல்லாம் பேசி வெறுப்பு ஏற்றுவாலே என புலம்புகிறார் அர்ச்சனா. இத்துடன் இன்றைய ராஜா ராணி எபிசோட் முடிவடைகிறது.