பெரிய சம்பளம் கொடுத்து விஜய் டிவி நடிகரை இழுத்துப் போட்டுள்ளார் சன் டிவி நடிகர் ஒருவர்.

Raja Rani Sanjeev in Sun TV Serial : தமிழ் சினிமாவில் குளிர் 100 டிகிரி, இங்கிலீஷ் படம் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தவர் சஞ்சீவ். வெள்ளித் திரைப் படங்கள் பெரிய அளவில் கை கொடுக்காததால் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியலில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார்.

பெரிய சம்பளம் கொடுத்து விஜய் டிவி நடிகரை இழுத்துப் போட்ட சன் டிவி - யார் அவர் தெரியுமா??

இந்த சீரியலை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான காற்றின் மொழி என்ற சீரியலில் நடித்தார். ஆனால் இந்த சீரியல் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் தற்போது இவர் சன் டிவி பக்கம் தாவ இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் : இன்று முக்கிய முடிவுகள்..

சன்டிவி மிகப் பெரிய சம்பளம் கொடுத்து இவரை புதிய சீரியல் ஒன்றில் கமிட் செய்துள்ளது. இந்த சீரியல் தினமும் இரவு ஏழு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகும் என சஞ்சீவ் தம்முடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.

மீண்டும் படங்களை தணிக்கை செய்வது நியாயமற்றது! – FEFSI RK.Selvamani Speech | HD