மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர் ராஜா ராணி 2 சீரியல் பிரபலங்கள்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல் ராஜா ராணி. முதல் சீசனின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி முடிவுக்கு வந்தது.
இந்த இரண்டாவது சீசனில் ஆலியா மானசா நாயகியாக நடிக்க சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் சித்து. இந்த சீரியல் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் தற்போது ஆலியா மானசா, சித்து, பிரவீனா ஆகியோர் மீண்டும் சந்தித்துக் கொண்டுள்ளனர்.
ஆலியா மானசா மற்றும் பிரவீனா என இருவரும் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடப்பட்டது.