மொத்த குடும்பத்துக்கும் சிவகாமி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோட்டில் சிவகாமி தனி ஆளாக மொட்டை மாடியில் வந்து நின்று கொண்டிருக்க குடும்பத்தார் அனைவரும் அவரைக் காணவில்லை என தேடி மேலே வர சரவணன் பங்ஷன் குறித்து பேச நான் வரவில்லை நீங்க போய்ட்டு வாங்க என கூறுகிறார். சிவகாமி எதைஎதையோ காரணம் சொல்ல அர்ச்சனா அவர் பங்கிற்கு கிளப்பி விடுகிறார்.

மொத்த குடும்பத்துக்கும் சிவகாமி கொடுத்த அதிர்ச்சி.‌. சந்தியா செய்த வேலை - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு எல்லோரும் கீழே சென்று விட சிவகாமி சந்தியாவிடம் நான் அவ்வளவு சொல்லியும் நீ சரவணனிடம் பேசி இந்த பங்சனுக்கு போக வேண்டாம் என சொல்லவில்லை. நீ திமிர்த்தனம் காட்டினால் நானும் திமிர் தனத்தை காட்டுவேன் என வில்லி போல பேசுகிறார். என்ன செய்வது என தெரியாமல் தவித்த சந்தியா மறுநாள் மயிலை போலீஸ் அதிகாரியை சந்தித்து இந்த பங்சன் வேண்டாம் என திட்டவட்டமாக கூறி விட்டு வருகிறார்.

மொத்த குடும்பத்துக்கும் சிவகாமி கொடுத்த அதிர்ச்சி.‌. சந்தியா செய்த வேலை - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

வர வழியில் சரவணனிடம் செல்வம் தப்பித்து விட்டதால் போலீஸ் கவனம் முழுவதும் அவரை பிடிப்பதில் தான் இருக்கிறது ஆகையால் இந்த பங்சனை ரத்து செய்து விட்டார்கள் என சந்தியா கூறுகிறார். இந்த தகவலை சரவணன் வீட்டில் சொல்ல சந்தியா வீட்டுக்கு வந்ததும் அர்ச்சனா கிண்டலடிக்கிறார். பிறகு சிவகாமி வேண்டிக்கொண்டது யாருக்கு கேட்டுச்சோ இல்லையோ அந்த கடவுளுக்கு கேட்டுச்சு. நல்ல குடும்பப் பெண்ணா வீட்டு வேலையை பாரு, மதியத்துக்கு என்ன சமைக்கலாம் என்று யோசி என சந்தியாவை உள்ளே அனுப்பி வைத்துவிட்டு சந்தோஷப்படுகிறார் சிவகாமி. இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.