அர்ச்சனாவுக்கு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடு குழந்தையுடன் அர்ச்சனா வீட்டுக்கு வர அக்கம் பக்கத்தில் இருந்து குழந்தையை வாங்கி பார்த்துவிட்டு என்ன உன் ஜாடையும் இல்ல செந்தில் ஜாடையும் இல்ல குழந்தை யாரோ மாதிரி இருக்கு என கேட்க அர்ச்சனா அதிர்ச்சி அடைகிறார்.

அர்ச்சனாவுக்கு அக்கம் பக்கத்தினர் கொடுத்த அதிர்ச்சி.. பிராக்டிஸில் சரவணனால் சந்தியாவுக்கு நேர்ந்த சோகம் - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

என்ன இப்படி எல்லாம் பேசுறீங்க நீங்க என்ன பேசணும்னு தெரிஞ்சு தான் பேசுறீங்களா? யார் மாதிரி இருந்தா என்ன குழந்தை குழந்தை தானே என ஜெசி அவர்களிடம் வாக்குவாதம் செய்ய அவர்கள் இந்த பொண்ணு வாயாடியா இருக்கும் போலையே என பேசிக் கொள்கின்றனர். அடுத்ததாக அர்ச்சனாவின் அம்மா அவன் எங்க அப்பா மாதிரி கண்ணு மூக்கு எல்லாம் அவர மாதிரி தான் இருக்கு என சொல்ல அப்படியா சரி சரி என சொல்லி குழந்தையை கொடுத்துவிட்டு கிளம்ப செந்தில் அர்ச்சனாவிடம் இனிமேலாவது கொஞ்சம் பொறுப்பா நடந்துக்க என சொல்லி அனுப்பி வைக்கிறார்.

இந்த பக்கம் சந்தியா பிராக்டிஸ் சென்று இருக்க சரவணன் சிவகாமி ரவி ஊருக்கு கிளம்ப தயாராக இருக்கின்றனர். சந்தியா வந்து விடுவார் என எதிர்பார்த்து எதிர்பார்த்து அவர் வராததால் ஒரு கட்டத்தில் கிளம்பிச் செல்கின்றனர். கிளம்பிச் செல்லும் போது வழியில் சந்தியா பிராக்டிஸில் இருக்கும் போது காரில் இருந்து இறங்கி சரவணன் சைகையில் பேச சந்தியாவும் சைகையில் பேசி கண் கலங்க அதை பார்த்த கௌரி மேடம் எமோஷன் எல்லாத்தையும் சாகடிக்கணும் என திட்டுகிறார்.

அர்ச்சனாவுக்கு அக்கம் பக்கத்தினர் கொடுத்த அதிர்ச்சி.. பிராக்டிஸில் சரவணனால் சந்தியாவுக்கு நேர்ந்த சோகம் - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்த பக்கம் காரில் சரவணன் கண்கலங்க சிவகாமி இதுக்கு தான் இதெல்லாம் வேண்டாம் வேண்டாம்னு சொன்னேன். இன்னைக்கு என் புள்ள தான் கஷ்டப்படுகிறான் என பேச ரவி ஆறுதல் படுத்துகிறார். அடுத்து பிராக்டிஸ் முடிந்து சந்தியா தனியாக உட்கார்ந்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்க அப்போது வரும் அக்பர் என்ன மேடம் முதல் நாளே பல்பு வாங்கனீங்களா என சந்தியாவை நக்கலாக பேச அவரது தோழிகள் இருவர் வந்து எதுக்கு இப்படி பேசுற என சொல்ல எனக்கு அட்வைஸ் பண்ணாம சந்தியாவுக்கு அட்வைஸ் பண்ணுங்க என சொல்லிவிட்டு கிளம்புகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.