ரைசா வில்சன் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் லுக் போட்டோஸ் வைரல்.

Raizawilson latest stylish look photos trending:

தமிழ் சினிமாவில் மாடலிங் நடிகையாக அறிமுகம் ஆகி பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் ரைசா வில்சன். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் கஜோல் உதவியாளராக நடித்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேம காதல் படத்தில் நடித்தார்.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வரும் ரைசா சமூக வலைதளங்களில் விதவிதமாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சிம்லாவில் வெக்கேஷன் சென்று இருக்கும் ரைசா ஸ்டைலிஷ் லுக்கில் அசத்தும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.