Rahul Gandhi :
Rahul Gandhi :

Rahul Gandhi : சென்னை: நாளை தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி.

தமிழகத்திற்கு நாளை வரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி, திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 4 பொதுக்கூட்டங்களில் பேச இருக்கிறார்.

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை நோக்கி செல்கிறது.

இந்நிலையில் வரும் 16ம் தேதி மாலை 5 மணியுடன் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது.

எனவே, அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

மேலும் வருகிற 13 -ம் தேதி அன்று காலை ராமநாதபுரத்திலும், மாலை தேனியிலும் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச உள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காக நாளை தமிழகம் வர இருக்கிறார்.

மேலும் கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திருப்பரங்குன்றம் ஆகிய 4 இடங்களில் நடைபெறும் பிரச்சார பொதுக் கூட்டங்களில் பங்கேற்க இருக்கிறார்.

எனவே பிரச்சார பொதுக் கூட்டங்களில் பங்கேற்க ராகுல் காந்தி, பெங்களூரில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் கிருஷ்ணகிரி வர இருக்கிறார்.

தமிழகத்தில் வரும் 18ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த மாதம் 13ம் தேதி சென்னை வந்த ராகுல் காந்தி, தனியார் மகளிர் கல்லூரியில் கலந்துரையாடினார்.

இந்நிலையில் 13 -ம் தேதி தமிழகம் மீண்டும் வர இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது,.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here