Radhe Shyam Release Postponed Announcement

RRR படத்தைத் தொடர்ந்து இன்னொரு முன்னணி நடிகரின் பிரம்மாண்ட திரைப்படம் தள்ளிப்போய் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Radhe Shyam Release Postponed Announcement : பொதுவாக பொங்கல் தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாவது வழக்கமான ஒன்று. கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு கிடந்த நிலையில் மீண்டும் திறக்கப்பட்டதால் பல்வேறு திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன.

இந்த பொங்கலுக்கு அஜித்தின் வலிமை, ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள RRR, பிரபாஸின் ராத்தே ஷ்யாம் ஆகிய திரைப்படங்கள் வெளியாக இருந்தன.

என் பொண்டாட்டி வாயை Lock பண்ண நகை இருக்கா! – Sathish and Deepa Shopping Atrocities | Saravana Stores

‘நமசிவாய’ என்பதன் பொருள் என்ன?

ஆனால் மீண்டும் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க தொடங்கி இருப்பதால் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக RRR திரைப்படம் மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வலிமை படமும் ரிலீஸ் தள்ளிப் போகும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் திட்டமிட்டபடி வெளியாகும் என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். இப்படியான நிலையில் பிரபாஸின் ராத்தே ஷ்யாம் திரைப்படமும் தள்ளிப் போவதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படமும் மறு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.