Web Ad 2

ராயன் படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

ராயன் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பு மற்றும் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் ராயன்.

படத்தின் கதைக்களம் :

சிறு வயதிலேயே அம்மா, அப்பா இறந்து விட காத்தவராயனான தனுஷ் தனது தம்பிகளான முத்துவேல் ராயன் (சந்தீப் கிஷன்), மாணிக்கவேல் ராயன் (காளிதாஸ்) மற்றும் தங்கை துர்காவை (துஷாரா) அழைத்துக் கொண்டு சென்னைக்கு வருகிறார்.

சென்னையில் குடும்பத்துடன் உணவகம் நடத்தி வந்த நிலையில், பிரபல தாதாவாக இருக்கும் சரவணன், எஸ்.ஜே. சூர்யா ஆகிய இருவருக்கும் இடையே தனுஷ் எப்படி சிக்கி கொண்டார்? அவர்களிடம் இருந்து குடும்பத்தை காப்பாற்ற தனுஷ் என்ன செய்தார்? என்பதே இந்த படத்தின் கதை.

படத்தை பற்றிய அலசல் :

தனுஷ் அண்ணனாக எதார்த்தமான நடிப்பை கொடுத்து அசத்தி உள்ளார். அதே சமயம் இயக்குனராகவும் நம்மை கவர தவறவில்லை.

நேர்த்தியான கதை நகர்வு என படத்தை மேலும் மெருகேற்றி உள்ளார்.

ஆக்ஷன், எமோஷன் என அனைத்திலும் அதிரடி காட்டியுள்ளார்.

படத்தில் நடித்துள்ள சந்தீப் கிஷன், காளிதாஸ், துஷாரா விஜயன், எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ் என அனைவரும் அனைவரும் எதார்த்தமான நடிப்பை கொடுத்து படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர்.

ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசை மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது. சண்டைக் காட்சிகள் தரம்.

Raayan Movie Review
Raayan Movie Review