அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா-2 படத்தின் மெகா வசூல் சாதனை: முழு விவரம்
கலெக்ஷனிலும் செம மாஸாக எகிறி வருகிறது புஷ்பா-2 படம். இது குறித்த விவரம் பார்ப்போம்..
சுகுமார் இயக்கி, அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா-2 திரைப்படம் ரூ.500 கோடிகளுக்கு மேல், செலவு செய்து உருவாக்கப்பட்டது. இப்படத்தில், அல்லு அர்ஜுன் சம்பளம் மட்டுமே ரூ.300 கோடி என கூறப்படுகிறது.
படம் 5-ம் தேதி ரிலீஸ் ஆனதிலிருந்து பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் குவித்து வருகின்றது. குறிப்பாக, முதல் நாளில் ரூபாய் 294 கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்தது.
படத்திற்கு முதல் நாளில் கலவையான விமர்சனங்கள் வந்தாலும், ரசிகர்கள் மத்தியில் படத்தினைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்ததால், படத்தின் வசூலில் பாதிப்பு எவ்வித பாதிப்புமில்லை.
படம், இரண்டாவது நாளில் ரூபாய் 449 கோடிகள் வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும், வார இறுதி நாட்களில் பொதுமக்கள் மத்தியிலும் படத்தினை ரிப்பீட்டாக பார்க்க வேண்டுமென்ற எண்ணத்தில் இருக்கும் ரசிகர்களால், திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாய் ஓடிக்கொண்டுள்ளது.
இதனால், படம் 3-வது நாளான நேற்று டிசம்பர் 7-ம் தேதி மட்டும் இந்தியாவில் சுமார் 120 கோடி ரூபாய் வசூலானது. இது மட்டுமில்லாமல், உலகம் முழுவதும் சேர்த்து பாக்ஸ் ஆபிஸில் நேற்று ஒருநாள் மட்டும் ரூபாய் 150 கோடிகள் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகின்றது.
இதனால், படம் முதல் மூன்று நாட்களில், சுமார் 621 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவில் 3 நாளில் ரூபாய் 621 கோடிகளை வசூல் செய்த படமாக இப்படம் மெகா சாதனை படைத்துள்ளது.