புஷ்பா 2 திரைப்படத்தில் நடனமாட இருக்கும் பிரபல சென்சேஷன் இளம் நடிகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்த படம் ‘புஷ்பா’. ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்ட இப்படம் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை குவித்து பெரும் வெற்றியை பெற்றிருந்தது.

அதிலும் குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்று இருந்த ‘ஊ சொல்றியா’ மாமா பாடலுக்கு சமந்தா போட்டிருந்த குத்தாட்டம் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. அந்த வகையில் தற்போது உருவாகி வரும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சமந்தா நடனம் ஆடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் தற்போது புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு பாடலுக்கு சமந்தாவுக்கு பதிலாக தெலுங்கு திரையுலகின் இளம் சென்சேஷன் நடிகை ஸ்ரீலீலா குத்தாட்டம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.