சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் மரணம் அடைந்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Puneeth Rajkumar Passes Away : கன்னட திரையுலகில் பழம்பெரும் நடிகரான ராஜ்குமாரின் மகன்தான் புனித் ராஜ்குமார். தற்போதைய கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் இவருக்கு வயது 47. பல்வேறு படங்களில் நடித்துள்ள இவருக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரூ.102 கோடியில், கல்வித்துறைக்கு கட்டிடங்கள் : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

இது கன்னட திரையுலக ரசிகர்கள் புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இவருடைய மறைவு அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து பெங்களூருவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் Rajinikanth அனுமதிக்க இதுதான் காரணமா? – வெளியான புதிய தகவல் | HD

ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.